திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 20 ஜனவரி 2021 (18:30 IST)

பாலா தயாரிக்கும் விசித்திரன் பட சர்ச்சை விவகாரம் – நீதிமன்றம் நோட்டீஸ்!

ஆர் கே சுரேஷ் நடிப்பில் இயக்குனர் பாலா தயாரித்துள்ள விசித்திரன் திரைப்படத்தின் பெயரை பயன்படுத்தக் கூடாது என்று சதீஷ்குமார் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

பாலாவின் பி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் ஆர்கே சுரேஷ் கதாநாயகனாக நடிக்கும் ஒரு திரைப்படத்தை தயாரித்து வருகிறது. இந்த படம் மலையாள படமான ஜோசப்பின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்துக்கு விசித்திரன் என பெயர் வைக்கப்பட்டு ப்ரமோஷன் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த சிஎஸ்கே சி.எஸ்.கே. புரோடக்சன் என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் சதிஷ்குமார். இந்த தலைப்பை 2015 ஆம் ஆண்டு பதிவு செய்து தற்போது வரை புதுப்பித்து வருவதால் அந்த தலைப்பை பாலா பயன்படுத்தக் கூடாது என நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாலா மற்றும்  விசித்திரன் படத்தின் இணை தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை ஜனவரி 25-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.