ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்துல கார்த்திக் சுப்பராஜ் சொல்றத நான் ஏத்துக்க மாட்டேன்.. வெற்றிமாறன் விளக்கம்!
தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 10 ஆம் தேதி ரிலீஸான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா ஆகிய இருவரும் நடித்துள்ளனர். இருவருக்கும் சம அளவில் முக்கியத்துவம் கொடுத்து படத்தை இயக்கியுள்ளார் கார்த்திக் சுப்பராஜ். படம் 1975களில் நடப்பதாக உருவாக்கப் பட்டு இருந்தது.
சினிமா என்ற கலையின் சக்தியை காட்டும் விதமாக இந்த படத்தை உருவாக்கி இருந்தார் கார்த்திக் சுப்பராஜின். படம் தொடங்குவதற்கு முன்பாக “நாம் கலையை தேர்ந்தெடுப்பதில்லை. கலைதான் நம்மை தேர்ந்தெடுக்கிறது” என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது.
இதுபற்றி ஒரு விவாத நிகழ்ச்சியில் பேசியுள்ள இயக்குனர் வெற்றிமாறன் “கலைதான் நம்மை தேர்ந்தெடுக்கிறது என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. நாம்தான் அதற்காக ஒரு முடிவெடுத்து உழைக்க வேண்டும். அது தானாக எல்லாம் நம்மை தேர்வு செய்யாது” எனக் கூறியுள்ளார். வெற்றிமாறனின் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.