1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 15 டிசம்பர் 2023 (07:02 IST)

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை நான் விரைவில் பார்ப்பேன்… ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் கிளிண்ட் ஈஸ்ட்வுட் அறிவிப்பு!

தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 10 ஆம் தேதி ரிலீஸான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா ஆகிய இருவரும் நடித்துள்ளனர். இருவருக்கும் சம அளவில் முக்கியத்துவம் கொடுத்து படத்தை இயக்கியுள்ளார் கார்த்திக் சுப்பராஜ். படம் 1975களில்  நடப்பதாக உருவாக்கப் பட்டு இருந்தது.

ரிலீஸ் ஆனது முதல் இந்த படத்துக்கு சிறப்பான பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்த நிலையில் படத்தின் வசூலும் சிறப்பாக அமைந்தது. தீபாவளிக்கு வெளியான கார்த்தியின் ஜப்பான் திரைப்படம் அட்டர் ப்ளாப் ஆன நிலையில் ஜிகர்தண்டா  2 தீபாவளி வின்னராக அமைந்தது.

இந்த படத்தில் ஹாலிவுட் நடிகர் கிளிண்ட் ஈஸ்ட்வுட் இந்தியாவுக்கு ஷூட்டிங் வந்தது போலவும் அவரை படத்தின் கதாநாயகன் லாரன்ஸ் சந்தித்து பேசுவது போலவும் காட்சிகள் அமைத்திருந்தனர். ஈஸ்ட்வுட்டுக்கு ஒரு ட்ரிப்யூட் போல இந்த படத்தின் காட்சிகள் அமைந்தன. இந்நிலையில் ரசிகர் ஒருவர் ஈஸ்ட்வுட்டை டேக் செய்து ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்று ஒரு படத்தை எடுத்து உள்ளோம். அதில் உங்களின் சிறு வயது தோற்றத்தை காட்சி படுத்தியுள்ளோம். படம் நெட்பிளிக்ஸில் இருக்கிறது. வாய்ப்பிருந்தால் பாருங்கள்’எனக் கூறியிருந்தார்.

அதற்கு கிளிண்ட் ஈஸ்ட்வுட் எக்ஸ் பக்கத்தில் இருந்து “ஈஸ்ட்வுட் இந்த படத்தை பற்றி தெரிந்து வைத்துள்ளார். அவரின் இப்போதைய படம் முடிந்ததும் இந்த படத்தைப் பார்ப்பார்.” எனக் கூறப்பட்டுள்ளது. இதை பகிர்ந்துள்ள கார்த்திக் சுப்பராஜ் சம்மந்தப்பட்ட ரசிகருக்கும் ஈஸ்ட்வுட்டுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.