1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 25 ஏப்ரல் 2018 (20:27 IST)

கமலுக்கு முதல் குரல் கொடுத்த திரையுலக பிரபலம் மரணம்

பழம்பெரும் பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி சென்னையில் இன்று உடல்நலக்கோளாறு காரணமாக காலமானார். அவருக்கு வயது 87
 
கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான படம் 'களத்தூர் கண்ணம்மா. இந்த படத்தில் இடம்பெற்ற 'அம்மாவும் நீயே அப்பாவும் நீயே' என்ற பாடலை பாடியவர் எம்.எஸ்.ராஜேஸ்வரி. இந்த பாடல் மட்டுமின்றி பல குழந்தை நட்சத்திரங்களுக்காக பல பாடல்களை இவர் பாடியுள்ளார்.
 
மேலும் காதல் பாடல் முதல் பக்தி பாடல்கள் வரை சுமார் 500க்கும் மேற்பட்ட பாடல்களை இவர் பாடியுள்ளார். இவர் கமல்ஹாசன் நடித்த 'நாயகன்' என்ற படத்திற்காக பாடிய 'நான் சிரித்தால் தீபாவளி' என்ற பாடல் சூப்பர் ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் கடந்த சில காலமாக உடல்நலமின்றி சிகிச்சை பெற்று வந்த எம்.எஸ்.ராஜேஸ்வரி இன்று மாலை காலமானார். அவரது இறுதிச்சடங்கு நாளை நடைபெறவுள்ளது.