வேலைக்காரன் இயக்குநரின் அடுத்த படம் என்ன தெரியுமா?
‘வேலைக்காரன்’ படத்தின் இயக்குநர் மோகன் ராஜாவின் அடுத்த படம் பற்றிய தகவல் கிடைத்துள்ளது.
மோகன் ராஜா இயக்கத்தில் கடந்த வாரம் ரிலீஸான படம் ‘வேலைக்காரன்’. சிவகார்த்திகேயன், நயன்தாரா ஜோடியாக நடித்த இந்தப் படத்தில், பஹத் பாசில் வில்லனாக நடித்துள்ளார். சார்லி, ரோகிணி, பிரகாஷ் ராஜ், ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், ரோபோ சங்கர், சினேகா என பல நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார். 24 ஏஎம் ஸ்டுடியோ சார்பில் ஆர்.டி.ராஜா இந்தப் படத்தை தயாரித்திருந்தார். இந்தப் படத்தைத் தொடர்ந்து, மோகன் ராஜா இயக்கும் அடுத்த படத்தை தினேஷ் கார்த்திக் தயாரிக்கிறார். இவர் ‘அரண்மனை’ படத்தின் முதல் பாகத்தைத் தயாரித்தவர். நடிகர் - நடிகைகள் பற்றிய விவரம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.