செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 12 ஜனவரி 2023 (15:39 IST)

வீரசிம்மா ரெட்டியைக் கொண்டாடிய தெலுங்கு ரசிகர்கள்… அமெரிக்காவில் நிறுத்தப்பட்ட ஷோ!

பாலகிருஷ்ணா நடித்துள்ள வீரசிம்மா ரெட்டி திரைப்படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியுள்ளது.

பாலகிருஷ்ணா நடிப்பில் சங்கராந்தியை முன்னிட்டு வீரசிம்மா ரெட்டி திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. அமெரிக்காவிலும் இந்த படம் ரிலீஸ் ஆன நிலையில் அங்குள்ள ஒரு தியேட்டரில் பாலகிருஷ்ணாவின் ரசிகர்கள் படத்தை கொண்டாட்டமாக பார்த்துள்ளனர்.

அப்போது காகிதங்களைக் கிழித்து எறிந்து வீசி கொண்டாடி பார்த்துள்ளனர். இதனால் கடுப்பான சம்மந்தப்பட்ட தியேட்டர் நிர்வாகம், போலீஸை அழைத்து வந்து ரசிகர்களை வெளியேற்றி காட்சியை ரத்து செய்துள்ளனர். இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது.