1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 12 ஜனவரி 2023 (08:08 IST)

அமெரிக்காவில் முதல் நாள் வசூலில் முந்தும் அஜித்தின் துணிவு!

அஜித் நடிப்பில் வினோத் இயக்கியுள்ள துணிவு திரைப்படம் முதல் நாளில் பாசிட்டிவ்வான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

அஜித்தின் துணிவு திரைப்படம் நேற்று அதிகாலை 1 மணிக்கு தமிழகத்தில் வெளியானது. இதையடுத்து தமிழகம் முழுவதும் இந்த படத்துக்கு ரசிகர்கள் ஆரவாரமான வரவேற்பை அளித்து வருகின்றனர். சென்னை உள்ளிட்ட பல இடங்களில் துணிவு திரைப்படம் ஓடும் திரைகளில் ஆயிரக் கணக்கான ரசிகர்கள் கூடி கொண்டாடி மகிழ்ந்து படத்தைப் பார்த்து மகிழ்ந்தனர்.

இந்நிலையில் தமிழ்நாட்டைப் போல வெளிநாட்டிலும் துணிவு நல்ல வசூலைப் பெற்று வருகிறது. இந்த படம் அமெரிக்காவில் 207 திரைகளில் வெளியாகி முதல் நாளில் இரவுக்காட்சிக்கு முன்பாகவே 2.3 லட்சம் அமெரிக்க டாலர்கள் வசூலித்து சாதனைப் படைத்துள்ளது. இரவுக்காட்சி முடிந்தால் 2.5 லட்சம் டாலர்களுக்கு மேல் வசூலிக்கும் என சொல்லப்படுகிறது. அஜித்தின் சினிமா வாழ்க்கையில் இதுதான் மிக அதிகமான வசூல் என சொல்லப்படுகிறது.

இதைப் படத்தை வெளியிட்ட சரிகம சினிமாஸ் நிறுவனம் டிவிட்டரில் அறிவித்துள்ளது.