’வீரமே வாகை சூடும்’ அப்டேட் தந்த விஷால்!
விஷால் நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று வீரமே வாகை சூடும் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே
ஏற்கனவே இந்த படம் டிசம்பரில் ரிலீஸ் ஆகும் என விஷால் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்த தகவலை தெரிவித்துள்ளார்
இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு இன்று முதல் தொடங்க இருப்பதாக அவர் அறிவிப்பு செய்து புதிய புகைப்படம் ஒன்றையும் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் விஷால் மற்றும் யோகிபாபு உள்ளனர் என்பதும் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
விஷால் ஜோடியாக டிம்பிள் ஹயாதி நடித்து வரும் இந்த படத்தை து.பா.சரவணன் என்பவர் இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது