செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 10 செப்டம்பர் 2021 (18:19 IST)

விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’ ரிலீஸ் அறிவிப்பு!

விஷால் நடித்து முடித்துள்ள எனிமி திரைப்படம் வரும் ஆயுத பூஜை தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் அவர் நடித்து வரும் மற்றொரு திரைப்படம் டிசம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது 
 
நடிகர் விஷால் சற்றுமுன் தனது ட்விட்டர் பக்கத்தில் வீரமே வாகை சூடும் திரைப்படம் டிசம்பர் மாதம் வெளியாகும் என அறிவித்து அதுகுறித்த புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார் இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
அக்டோபரில் எனிமி, டிசம்பரில் வீரமே வாகை சூடும் ஆகிய படங்களை ரிலீஸ் செய்யும் விஷால் அதன் பின்னர் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் துப்பறிவாளன் 2 படத்தையும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
எனவே அடுத்த ஆறு மாதத்திற்குள் விஷாலின் மூன்று படங்கள் வெளியாக இருப்பதால் விஷால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வீரமே வாகை சூடும் என்ற படத்தைத் சரவணன் என்பவர் இயக்கி உள்ளார் என்பதும் இந்த படத்தில் நாயகியாக டிம்பிள் ஹயாதி என்பவர் நடித்துள்ளார் என்பதும் இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது