வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 17 ஜனவரி 2022 (10:45 IST)

ரிலிஸ் தேதியை உறுதி செய்யப்பட்ட வீரமே வாகை சூடும்!

விஷாலின் வீரமே வாகை சூடும் படத்தின் ரிலிஸ் கண்டிப்பாக ஜனவரி 26 ஆம் தேதி உறுதி என்று படக்குழு.

விஷால் நடித்த 'வீரமே வாகை சூடும்' என்ற திரைப்படம் ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பொங்கலுக்கு முந்தைய வாரம் எஸ்எஸ் ராஜமவுலியின் ’ஆர்.ஆர்.ஆர்’, பொங்கலுக்கு அஜீத்தின் வலிமை மற்றும் பிரபாஸ் நடித்த ‘ராதே ஷ்யாம்’ ஆகிய படங்கள் வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் ’ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் தற்போது பின்வாங்கி விட்டது என்றும் அதேபோல் ராதே ஷ்யாம் திரைப்படம் ரிலீஸ் ஆவது சந்தேகமே என்று கூறப்படுகிறது. எனவே பொங்கலுக்கு இப்போதைக்கு வலிமை மட்டுமே ரிலீஸ் ஆகும் என தெரிகிறது. எனவே ஜனவரி 26 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டு இந்த விஷாலின் வீரமே வாகை சூடும் திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டது.

ஆனால் அது என்ன காரணத்தினாலோ நடக்கவில்லை. அதே போல ஜனவரி 26 ஆம் தேதி கூட ரிலிஸ் ஆக வாய்ப்பில்லை என்றே சொல்லப்பட்டு வந்தது. ஆனால் இப்போது படம் ஜனவரி 26 ஆம் தேதி கண்டிப்பாக ரிலீஸ் ஆகும் என படக்குழு உறுதி செய்துள்ளது.