விஷாலின் அடுத்த படத்தில் ஜிவி பிரகாஷ்: அதிகாரபூர்வ அறிவிப்பு!
விஷால் நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விஷால் நடித்த வீரமே வாகை சூடும் என்ற திரைப்படம் ஜனவரி 26 ஆம் தேதி வெளியாக உள்ளது. மேலும் அவர் துப்பறிவாளன் 2, லத்தி ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சமீபத்தில் விஷால் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி என்ற திரைப்படம் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் குறித்த அறிவிப்பை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார்
இந்த படத்திற்கு இசை அரசன் ஜீவி பிரகாஷ் இசையமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் தான் நடிக்க இருந்ததாகவும் தற்போது இசை மட்டும் அமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.