வெள்ளி, 7 பிப்ரவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Suresh
Last Updated : வியாழன், 24 செப்டம்பர் 2015 (12:11 IST)

வேதாளம் அஜித் - கலாய்க்கும் கத்துக்குட்டிகள்

பெயர் வைக்கும் போது அகராதியை மட்டுமில்லை, அகராதிப் புடிச்ச சில மனிதர்களையும் பார்க்க வேண்டியிருக்கிறது.


 

 
சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படத்துக்கு வேதாளம் என்று பெயர் வைத்துள்ளனர். இதன் பெயர் மற்றும், பர்ஸ்ட் லுக் நள்ளிரவு 12 மணிக்கு வெளியானது.
 
ஒருபக்கம் இந்தப் பெயரையும், அஜித்தின் ரெட் கெட்டப்பையும் ரசிகர்கள் கொண்டாட, எதிரணியில் உள்ள அகாராதி பிடித்த சிலர், வேதாளம் அஜித் என்று கலாய்க்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
 
கௌதம் படத்துக்கு என்னை அறிந்தால் என்று பெயர் வைத்தபோது, அதேபெயரில் ஷகிலா ஒரு படம் நடித்திருக்கிறார் என்ற தகவலை தோண்டியெடுத்து அஜித்தை கிண்டலடிக்கிறேன் என, என்னை அறிந்தால் டைட்டிலை பிரேதப் பரிசோதனை செய்தது ஒரு கூட்டம். அவர்கள்தான் இப்போது வேதாளம் அஜித் என்று கலாய்க்கிறார்கள்.
 
இந்த கத்துக்குட்டிகளிடமிருந்து இணையத்தை யார் காப்பாற்றப் போகிறார்கள்?