ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 21 செப்டம்பர் 2018 (13:36 IST)

எங்கு செல்வதென தெரியவில்லை : பத்திரிக்கையாளர்களிடம் சரணடைந்த வனிதா விஜயகுமார்

வீட்டை விட்டு வெளியேற்றி விட்டதால், எங்கு செல்வதென தெரியவில்லை என வனிதா விஜயகுமார் கண்ணீர் பேட்டியளித்துள்ளார்.

 
நடிகர் விஜயகுமாருக்கு மதுரவாயல் அருகே ஆலப்பாக்கத்தில் வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டை சினிமா படப்பிடிப்பிற்காக வாடகைக்கு எடுத்த அவரின் மகள் வனிதா, படப்பிடிப்பு முடிந்த பின்பும் வீட்டை காலி செய்யவில்லை. இது குறித்து விஜயகுமார் தரப்பு கேட்ட போது இது எனது சொத்து, வீட்டை காலி செய்ய முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.  
 
இதனால், வேறுவழியின்றி நடிகர் விஜயகுமார், வீட்டிலிருந்து அவரை காலி செய்து தரும்படி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுபற்றி, செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க அந்த வீட்டின் முன்பு சென்ற போது, வனிதா செய்தியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார். பின்னர் ஒரு கட்டத்தில் தகாத வார்த்தைகளையும் பயன்படுத்தினார்.
 
நைட்டியில் நடுரோட்டில் நின்றுக்கொண்டு இவ்வாறு செய்தியாளர்களிடம் மோசமாக நடந்துக்கொண்டு அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது.
 
நடிகர் விஜயகுமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் நடிகை வனிதா மீது வீட்டிற்குள் அத்துமீறி நுழைதல், கொலை மிரட்டல், பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் வனிதாவை வீட்டில் இருந்து வெளியேற்றிய போலீசார் அவருடன் தங்கியிருந்த அவருடைய நண்பர்களான 8 பேர்களை கைது செய்தனர்.
 
அதன் பின் செய்தியாளர்களிடம் தயவை நாடிய வனிதா, என் தாய் மஞ்சுளாவின் சொத்துக்கு வாரிசு. ஆனால், காவல் அதிகாரிகள் என்னை விரட்டிவிட்டனர். தற்போது எங்கு செல்வதென்றே தெரியவில்லை என கண்ணீர் மல்க பேட்டி கொடுத்தார்.