திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 25 நவம்பர் 2021 (11:04 IST)

வலிமை ரிலீஸ் தேதி இதுதானாம்… படக்குழு எடுத்த முடிவு!

வலிமை படம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தாலும் எந்த தேதியில் ரிலிஸாகும் என்ற அறிவிப்பு வெளியாகவில்லை.

மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தின் ரிலீஸ் மற்றும் இறுதிக்கட்ட வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.  பொங்கல் பண்டிகைக்கு வலிமை படம் வெளியாக உள்ளது.

ஆனால் இன்னமும் தேதி அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் ஜனவரி 12 ஆம் தேதி புதன் கிழமையில் வெளியாக அதிகவாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆர் ஆர் ஆர் படம் ஜனவரி 7 ஆம் தேதி வெளியாக வலிமை 5 நாட்கள் இடைவெளியில் வெளியாகி 20 ஆம் தேதி வரை உள்ள பொங்கல் பண்டிகை விடுமுறை முழுவதையும் கைப்பற்ற முடிவு செய்துள்ளதாம்.