நான் கண்ணுறங்காமல் காணும் கலைக் கனவு: வைரமுத்துவின் புத்தாண்டு கவிதை!
2020ஆம் ஆண்டு பல்வேறு சோதனைகளை கொடுத்து நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இன்று புதிதாக 2021 ஆம் ஆண்டு பிறந்து உள்ளது. இந்த ஆண்டாவது உலக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் இருக்க வேண்டும் என்றும் உலக தலைவர்கள் முதல் உள்ளூர் தலைவர்கள் வரை வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்
அதேபோல் புத்தாண்டு கொண்டாட்டங்கள் குறித்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவுசெய்யும் திரையுலக பிரபலங்கள் பலரும் புத்தாண்டு வாழ்த்துக்களை தங்களது ரசிகர்களுக்கு தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கவியரசு வைரமுத்து அவர்கள் ஒவ்வொரு புத்தாண்டு தினத்திலும் ஒரு கவிதை மூலம் தனது ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிப்பார் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் இன்று பிறந்து உள்ள 2021 ஆம் புத்தாண்டில் அவர் எழுதிய கவிதை பின்வருமாறு:
நாட்படு தேறல்.
புத்தாண்டில் நான் கண்ணுறங்காமல்
காணும் கலைக் கனவாகும்.
நல்லவர் கூட்டுறவால் நனவாகும்.
வாழ்த்தி வணங்குகிறேன்.
வாழ்த்துங்கள்.