திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 26 மார்ச் 2020 (08:28 IST)

வடிவேலுவை மீண்டும் நடிக்க சொன்னார் விஜயகாந்த் – நடிகர் பரபரப்பு தகவல் !

நடிகர் வடிவேலுவுடன் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வந்த சாரப்பாம்பு சுப்பராஜ் வடிவேலு மற்றும் விஜயகாந்த் பற்றி பேசியுள்ளார்.

நடிகர் சாரப்பாம்பு சுப்பராஜ் வடிவேலுவுடன் பல படங்களில் நடித்து பிரபலமானவர். ஆனால் அவர் துணை இயக்குனர் என்பது யாருக்கும் தெரியாது. வடிவேலு அறிமுகமான என் ராசாவின் மனசிலே படத்தில் துணை இயக்குனராக பணிபுரிந்த போதே வடிவேலு
வுடன் பழக்கம் ஏற்பட்டதாக சொல்லியுள்ளார்.

இந்நிலையில் விஜயகாந்த் மற்றும் வடிவேலு ஆகிய இருவருடனும் நட்பாக இருந்த அவர் அவர்களுக்குள் நடந்த பிரச்சனை குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். அதில் ‘எனக்கு வடிவேலுவை அவன், இவன் என்று சொல்லுமளவுக்குப் பழக்கம். தேர்தல் சமயத்தில் விஜயகாந்த் அண்ணனை திட்டியது தொடர்பாக நான் வடிவேல் கிட்ட கோபப்பட்டேன். ஆனால் அவர் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். ஒருநாள் எதிர்க்கட்சி தலைவரா இருந்த விஜயகாந்தை நான் சந்தித்த போது ’வடிவேலுவை நடிக்க சொல்லுடா… அவர் இல்லாமல் போர் அடிக்குது’ எனக் கூறினார். இதை நான் வடிவேலுவிடம் சொன்னபோது ‘அண்ணன் அப்படியா சொன்னாரு’ என ஆச்சர்யமாகக் கேட்டார். அவர்கள் இருவருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. அவர்கள் ரசிகர்கள்தான் அடித்துக் கொண்டார்கள்’ எனக் கூறியுள்ளார்.