செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 22 ஏப்ரல் 2021 (15:58 IST)

சூரி ஹீரோ ; விஜய்சேதுபதி வில்லன்..தனுஷ் பட தயாரிப்பாளர் வாழ்த்து..

விஜய்சேதுபதி,  சூரி நடிக்கவுள்ள படத்திற்கு தனுஷ் பட தயாரிப்பாளர் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடித்துள்ள விடுதலை படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.

தனுஷுடனான அசுரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வரும் திரைப்படம் “விடுதலை”. இந்த படத்தின் மூலமாக காமெடி நடிகர் சூரி முதன்முறையாக கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார்.

இந்த படத்தின் முதல் லுக் இன்று காலை வெளியிடப்பட்டது. அதையடுத்து படத்தின் நாயகனாக நடிக்கும் சூரி ‘என் வாழ்வில் இந்த முக்கிய தருணத்தை ஏற்படுத்திக்கொடுத்த இயக்குநர் வெற்றிமாறன் அண்ணனுக்கும், இசைஞானி ஐயா அவர்களுக்கும், எல்ரெட் குமார் சாருக்கும் மனமார்ந்த நன்றிகள். புதிய பரிமாணத்தில் மாமா விஜய் சேதுபதியுடன் இணைவதில் மகிழ்ச்சி’ என டிவீட் செய்தார்.

இந்நிலையில் வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம்,பொல்லாதவன், அசுரன் போன்ற படங்களின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு இப்படத்திற்கு வாழ்த்துகள் தெரிவித்து தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், வெற்றி மாறனின் "விடுதலை" அகிலம் வியக்க , சிந்தையில் நிலைக்க, வெற்றியடைய வாழ்த்துக்கள் @VetriMaaran @VijaySethuOffl @sooriofficial எனத் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில், மாரி செல்வராஜ், இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான கர்ணன் படத்தை எஸ்,தாணு தயாரித்து வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.