ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Modified: புதன், 7 ஜூன் 2017 (17:42 IST)

நமீதாவுடன் ஜோடி போடும் உதயநிதி ஸ்டாலின்...

நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிகை நமீதாவுடன் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


 

 
‘சரவணன் இருக்க பயமேன்’ படத்திற்கு பின், தற்போது பொதுவாக என் மனட்சு தங்கம் மற்றும் இப்படை வெல்லும் ஆகிய படங்களில் உதயநிதி நடித்து வருகிறார். அதன்பின், இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் அவர் நடிக்க இருக்கிறார். 
 
இப்படம் மலையாளத்தில் வெளியான மகேஷிண்ட பிரதிகாரம் என்ற படத்தின் ரீமேக் எனத் தெரிகிறது. இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடிப்பதற்காக மலையாள முன்னணி நடிகை நமீதா பிரமோத்திடம் படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. எனவே, அவர் இந்த படத்தில் நடிப்பார் எனத் தெரிகிறது.