புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 7 மே 2022 (08:38 IST)

”சினிமாவுல ரெண்டு டான் இருக்காங்க… அது யாருன்னா?”…. உதயநிதி பேச்சு!

தமிழ் சினிமாவில் இப்போது ரெண்டு டான் இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் பேசியது கவனத்தை ஈர்த்துள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படம் வரும் 13ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி உள்ளது. இந்த டிரைலரில் சிவகார்த்திகேயன் காமெடி காட்சிகள் ரொமான்ஸ் காட்சிகள் ஆக்ஷன் காட்சிகள் அதிகமாக உள்ளன என்பதும் இந்த டிரைலருக்கு ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் உள்ளது.
முன்னதாக டிரைலர் மற்றும் படத்தின் பரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. அப்போது பேசிய படத்தின் விநியோகஸ்தரான உதயநிதி ஸ்டாலின் “சினிமாவில் இப்போது ரெண்டு டான் இருக்காங்க… ஒன்னு சிவகார்த்திகேயன். இன்னொன்னு அனிருத்” எனப் பேசியுள்ளார்.