புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: புதன், 4 அக்டோபர் 2017 (22:56 IST)

உதயநிதியை நிமிர வைத்த மோகன்லால்-பிரியதர்ஷன்

கோலிவுட் திரையுலகில் பிசியான நடிகர்களின் பட்டியலில் உதயநிதியும் இணைந்துவிட்டார். ஏற்கனவே அவர் நடித்த 'இப்படை வெல்லும்' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில் தற்போது இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் அவர் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.



 
 
இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலை இன்று பிரபல மலையாள நடிகர் மோகன்லால் தனது டுவிட்டரில் வெளியிட்டார். இந்த படத்திற்கு 'நிமிர்' என்ற டைட்டிலை பிரியதர்ஷன் தேர்வு செய்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு குற்றாலம் பகுதியில் நடைபெற்று வருவதாகவும் இந்த படத்தை வரும் டிசம்பரில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்தனர்
 
உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் மகேந்திரன், நமீதா பிரமோத், பார்வதி நாயர், சமுத்திரக்கனி, எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன் உள்ளிட்டோர் இந்த படம் மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'மகேஷிண்டே பிரதிகாரம்' படத்தின் ரீமேக் ஆகும். இந்த படத்திற்கு  சமுத்திரக்கனி வசனம் எழுதியுள்ளார். தர்புகா சிவா இசையமைப்பாளராகவும், ஏகாம்பரம் ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிந்துள்ளார்கள்.