வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 30 செப்டம்பர் 2021 (19:31 IST)

ஐக்கிய அரபு எமிரேட் நாட்டின் கோல்டன் விசாவை பெற்ற நடிகை!

ஐக்கிய அரபு நாட்டின் கோல்டன் விசாவை தமிழ் நடிகை ஊர்வசி ரெளட்டாலா பெற்றுள்ளது பெருமைக்குரியதாக கருதப்படுகிறது
 
ஐக்கிய அரபு நாடுகளுக்கும் கோல்டன் விசா ஒரு சில திரையுலக பிரபலங்களை பெற்றுள்ளார்கள் என்பது தெரிந்ததே. குறிப்பாக மம்முட்டி மோகன்லால் உட்பட ஒரு சிலர் பெற்றுள்ள நிலையில் இந்திய நடிகைகளில் முதல் முதலாக ஊர்வசி ரெளட்டாலா  இந்த விசாவை பெற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
10 ஆண்டுகளுக்குச் செல்லுபடி ஆன இந்த கோல்டன் விசாவை தனக்கு 12 மணி நேரங்களில் ஐக்கிய அரபு எமிரேட் அரசு அளித்துள்ளதாகவும் இது தனக்கும் தனது குடும்பத்திற்கும் மிகவும் பெருமை வாய்ந்தது என்றும் அவர் கூறியுள்ளார்
 
இந்த கோல்டன் விசாவை வைத்திருப்பவர்கள் கிட்டத்தட்ட ஐக்கிய அரபு நாட்டின் குடிமகன்கள் போலவே கருதப்படுவார்கள் என்பது குறிப்பிடதக்கது.