ஐபிஎல் தொடக்க விழாவில் தமிழ் நடிகைகள்.. பிரமாண்டமாக நடத்த ஏற்பாடு..!
ஐபிஎல் தொடக்க விழா வரும் 31ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது என்பதும் இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
சென்னை மற்றும் குஜராத் அணிகள் முதல் போட்டியில் மோத இருக்கும் நிலையில் இந்த போட்டிக்கு முன்னதாக பிரம்மாண்டமாக தொடக்க விழாவை நடத்த ஐபிஎல் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
கொரோனா காலத்திற்கு பின்பு நடைபெறும் முதல் தொடக்க விழா என்பதால் இதை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ் நடிகைகளான தமன்னா, ராஷ்மிகா மந்தனா மற்றும் பல பாலிவுட் பிரபல நட்சத்திரங்கள் இந்த தொடக்க விழாவில் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
தொடக்க விழாவிற்கு மட்டுமே ஒரு சில கோடிகள் செலவழிக்க ஐ பி எல் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
Edited by Siva