வியாழன், 16 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 7 மே 2021 (15:56 IST)

சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக சந்தீப் கிஷன்… பட அறிவிப்பில் ஏற்பட்ட குழப்பம்!

நடிகர் சந்தீப் கிஷனின் புதுப்படம் குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகி ரசிகர்களிடம் சிறிய குழப்பத்தை ஏற்படுத்தியது.

தமிழ் சினிமாவில் ஜெட் வேகத்தில் வளர்ந்து வருபவர் சிவகார்த்திகேயன். அவரின் படங்கள் விமர்சன ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும், வசூலில் காப்பாற்றி விடுகின்றன. இந்நிலையில் அவரை திரையுலகில் அனைவரும் சுருக்கமாக எஸ்கே என அழைத்து வருகின்றனர்.

ஆனால் நேற்று வெளியான ஒரு படத்தின் போஸ்டரில் எஸ் கே 28 என இருந்ததை பார்த்த ரசிகர்கள் சிவகார்த்திகேயனின் அடுத்த பட அறிவிப்போ என குழம்பினர். ஆனால் அது தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷனின் பட அறிவிப்பாம். சிவகார்த்திகேயனைப் போல அவரும் பெயரை இப்படி சுருக்கி போட்டதால் ஏற்பட்ட குழப்பமாம்.