திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 18 ஜூன் 2022 (17:18 IST)

பிரபல அரசியல் கட்சியில் இணையும் நடிகை த்ரிஷா ?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை த்ரிஷா. இவர் சிம்ரன் – பிரஷாந்த் நடித்த ஜோடி படத்தில் துணைக் கதாப்பாத்திரத்தி நடித்தார். அதன்பின்னர், சிம்பு நடித்த அலை படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகம் ஆனார்.

பின்னர், விஜய், அஜித், சூர்யா, தனுஷ், என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.

சில ஆண்டுகளுக்கு முன் அவர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்த 96 படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து முக்கிய கேரக்டர்களின் மட்டும் அவர் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகர் குஷ்பு போன்று த்ரிஷாவும் தேசிய அரசியலில் களமிறங்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது. மேலும், அவர் காங்கிரஸில் இணைய உள்ளதாகவு கட்சியைப் பலப்படுத்தும் நடவடிக்கையில் இறங்குவார் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.