திருச்சிற்றம்பலம் படம் வெற்றி; சக்சஸ் பார்டி கொண்டாடிய படக்குழு!
நடிகர் தனுஷின் திருச்சிற்றம்பலம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து படக்குழு சக்சஸ் பார்ட்டி கொண்டாடியுள்ளனர்.
தனுஷ், பிரியா பவானி சங்கர், நித்யாமேனன், ராஷி கண்ணா ஆகியோர் நடிப்பில் அனிருத் இசையில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் திருச்சிற்றம்பலம். இந்த படம் உலகம் முழுவதும் நேற்று திரையரங்குகளில் வெளியான நிலையில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
படம் பாஸிட்டிவ் விமர்சனங்களைக் குவித்து வரும் நிலையில், தனுஷை வைத்து நானே வருவேன் என்ற படத்தை இயக்கி வரும் இயக்குனர் செல்வராகவன் இப்படத்தைப் பாராட்டியுள்ளார்.
தான் இயக்கிய காதல் ஓவியம் படத்தை தியேட்டரில் பார்த்ததற்குப் பின், தற்போது தான் நடித்த திருச்சிற்றம்பலம் படத்தை பாராட்டிய பாரதிராஜாவுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
இந்த நிலையில், திரைப்படம் வெளியாகி 8 நாட்களில் 50 கோடி ரூபாய் வசூலீட்டுயுள்ளதால் இப்படத்தி வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடினர். இந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.