மக்களைக் கவர்ந்த சித்தி -2 சீரியலின் நேரம் மாற்றம்! நடிகை ராதிகா டுவீட்
கடந்த 1999 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான சீரியல் சித்தி. சிஜே. பாஸ்கர் இயக்கத்தில் ராதிகா சரத்குமார் நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில்ப மீண்டும் சித்தி -2 சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பாகிவருகிறது. ஆனால் கடந்த மார்ச் மாதத்திலேயே கொரோனா தாக்கம் ஏற்பட்டதால் ஊரடங்கினால் சில நாட்கள் படப்பிடிப்புகள் தொடங்கப்படவில்லை.
பின்னர், ஜூலை மாதத்திலிருந்து சித்தி -2 ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்டது. இதில் ராதிகாவின் கணவராக நடித்து வந்த பொன்வண்ணனுக்குப் பதிலாக நிலழ்கள் ரவியும், நிகிலா ராவ் கதாப்பாத்திரத்தில் காயத்ரி யுவராஜ் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
புதிய எபிஷோடுகளாக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ள சித்தி-2 திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பகிவந்தது. தெலுங்கில் வார நாட்களில் இரவு 7:3) மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது. இதன் ஒளிபரப்பு நேரத்தை மதியம் 2:30 மணிக்கு மாற்றியுள்ளனர். இதை ராதிகா சரத்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.