புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 2 ஜூலை 2020 (08:01 IST)

எனக்கு ரொம்ப மகிழ்ச்சி: டிக்டாக் தடை குறித்து ஆபாச பதிவு இலக்கியா பேட்டி

டிக்டாக் தடை குறித்து ஆபாச பதிவு இலக்கியா பேட்டி
இந்தியா மற்றும் சீனா எல்லையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்த மோதலில் 20 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்ததை அடுத்து சீனாவுக்கு எதிராக ஒட்டுமொத்த இந்திய மக்கள் கொந்தளித்தனர் என்பது தெரிந்ததே
 
இதனை அடுத்து மத்திய அரசு எடுத்த அதிரடி நடவடிக்கையை அடிப்படையில் சீனாவின் 59 செயலிகள் தடை செய்யப்பட்டன. அதில் கோடிக்கணக்கான பயனர்களை கொண்ட டிக் டாக் மற்றும் ஹலோ செயலிகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் டிக்டாக்கில் பிரபலமாக இருக்கும் பலர் தற்போது டிக் டாக் தடை செய்யப்பட்டுள்ளதால் பெரும் மன உளைச்சலில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் டிக்டாக்கில் ஆபாசமான பதிவுகள் பதிவு செய்து புகழ்பெற்றிருந்த இலக்கியா டிக்டாக் திடீர் தடை செய்யப்பட்டது தனக்கு மிகவும் மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்
 
டிக்டாக்கின் தடை செய்ய வேண்டும் என கடந்த சில மாதங்களாக பல போராட்டங்கள் நடந்த போதிலும் அது தடை செய்யப்படவில்லை என்றும் ஆனால் இன்று ஒரு நல்ல விஷயத்திற்காக தடை செய்யப்பட்டுள்ளதால் எனக்கு மிகுந்த சந்தோஷம் என்றும் தெரிவித்துள்ளார்
 
நமது நாட்டுக்காக போராடி உயிர் நீத்த 20 பேர்களுக்காக இந்த டிக் டாக் தடை செய்யப்பட்டுள்ளதால் தனக்கு மிகவும் பெருமையாக இருப்பதாகவும் அவர் இலக்கியா தெரிவித்துள்ளார். மேலும் டிக் டாக் இல்லை என்றாலும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் மூலம் தொடர்ந்துதான் வீடியோக்களை பதிவு செய்யப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்