1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 30 ஜனவரி 2021 (17:32 IST)

ரஜினி ரசிகர்களை ஊழலவாதிகளாக சித்தரித்த துக்ளக் – திடீர் பல்டி!

ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்கப்போவதில்லை என்றும் மக்கள் மன்றத்தினர் எந்த கட்சியில் வேண்டுமானாலும் சேர்ந்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளார்.

ரஜினியின் அரசியல் வருகைக்கு ஆரம்பத்தில் இருந்தே ஆதரவு தெரிவித்து வந்தது பாஜக ஆதரவு இதழான துக்ளக். அதன் ஆசிரியர் குருமூர்த்தியும் ரஜினி ஆட்சிக்கு வந்தால்தான் தமிழகத்தில் ஊழலை ஒழிக்க முடியும் எனப் பேசிவந்தார். ஆனால் ரஜினிகாந்தோ கடைசி நேரத்தில் தனது உடல்நிலையைக் காரணம் காட்டி அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போவதில்லை என அறிவித்தார்.

இதனால் ஏமாந்து போன ரசிகர்கள் தமிழகத்தில் உள்ள மற்றக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளில் சாரை சாரையாக சேர்ந்து வருகின்றனர். இந்நிலையில் ரஜினி ரசிகர்களை விமர்சிக்கும் விதமாக துக்ளக்கில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதில் ‘ரஜினிகாந்த் ‘தான் அரசியலுக்கு வரவில்லை என்பதை அறிவித்தாலும், அறிவித்தார். இதுதாண்டா சமயம் என்று, அவரது ரசிகர் மன்றத்தின் படை படையாக, தி.மு.க, அ.தி.மு.கவிலும் சேர்ந்துவருகின்றனர். சமீபத்தில் தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தி.மு.கவில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இணைந்துள்ளனர். எந்த ஊழலை ஒழிக்கவேண்டும் என்று ரஜினிகாந்த் நினைத்தாரோ, அந்த ஊழலின் பிறப்பிடமான தி.மு.கவிலேயே அவரது ரசிக சிகாமணிகள் சேர்ந்தது சிலருக்கு ஆச்சரியமாக கூட இருக்கலாம். இதில் அச்சர்யமென்ன வேண்டிக் கிடக்கிறது. ரஜினி வேண்டுமானால், தேசியவாதியாக, ஆன்மீகவாதியாக, அரசுக்கு ஒழுங்காக வரி செலுத்தும் நேர்மையாளராக இருக்கலாம். ஆனால், அவருடைய ரசிகர்கள் ஒன்றும் காமராஜ், கக்கன் வீட்டுக்கு அடுத்த வீட்டுக்காரர்களல்ல. தலைவா வா.. தலைமையேற்க வா.., இப்போது இல்லையென்றால் எப்போதுமே இல்லை’ என்று விதிவிதமாக ஆளுயர போஸ்டர்களையெல்லாம் ஊருக்கு ஊர் அச்சடித்து ஒட்டிய ரஜினி ரசிர்கள் ஒன்றும் தியாகத் திருவுருக்கள் அல்ல. எந்த ஆதாயத்தையும், எதிர்பார்க்காமலா இதையெல்லாம் செய்திருப்பார்கள்? நல்ல வேளையாக ரஜினி தப்பித்தார்.

எல்லா கட்சிக்காரர்களையும் போலத்தான் அவர்களுக்கும் அரசியல் என்பது பணம் பண்ணுற வழி. அதனால்தான் இத்தனை அவசர அவசரமாக கட்சிகளில் இணைந்துவருகிறார்கள். சர்காரியாக கமிஷனால் கூறப்பட்ட ஊழல்கள், 2 ஜி ஊழல்கள், நில அபகரிப்புகள் என்று சகல தகிடுதத்தங்களிலும் கைதேர்ந்த தி.மு.க, உச்ச நீதிமன்றத்தால் தண்டனைக்குள்ளான மறைந்த ஜெயலலிதா, சசிகால இத்யாதிகளைக் கொண்ட அ.தி.மு.க என்று இப்படி ஊழல் கட்சிகளைத் தேடிப் போய்ச் சேர வேறு எண்ண காரணம் இருக்க முடியும். இந்த ஊழல் கட்சிகளில் சேர்ந்து ஏதோ வட்டச் செயலாளர் வார்டு செயலாளர் என்று ஆனால்கூட நாலு காசு சம்பாதிக்கலாம் என்று கணக்குப்போட்டுதான் பிற கட்சிகளில் சேர்ந்துவருகிறார்கள் ரஜினி ரசிகர்கள்.

சுதந்திரப் போராட்டக் காலத்தில் நாட்டுக்காக சொத்து சுகங்களை இழந்த மாதிரி, இந்த 2021-லும் எல்லாவற்றையுஃம இழந்து நிற்க ரஜினி ரசிகர்கள் என்ன அசட்டு அம்மாஞ்சிகளா? நாடு எக்கேடு கெட்டால் என்ன? நாடு, மக்கள் என்று அலைந்தால் வீட்டைக் கவனிப்பது யார்? அட்லீஸ்ட் போஸ்டர் அடித்தும், பேனர் வைத்தும் செலவு செய்த காசையாவது திரும்ப எடுக்கவேண்டாமா?’ என்று செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

இத்தனை காலமாக ரஜினியையும் ரஜினி ரசிகர்களையும் புகழ்ந்து பேசிய துக்ளக் இப்போது தன் நிலைப்பாட்டை மாற்றியுள்ளதை பலரும் விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர்.