1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 18 ஜனவரி 2023 (13:54 IST)

அஜித்தால் ஏற்பட்ட ஆர்வம்.. பைக் லைசென்ஸ் பெற்ற ‘துணிவு’ நடிகை

manju warrier
அஜித்தால் ஏற்பட்ட ஆர்வம்.. பைக் லைசென்ஸ் பெற்ற ‘துணிவு’ நடிகை
அஜித் பைக் ஓட்டுவதை அருகில் இருந்து பார்த்த ஆர்வம் காரணமாக துணிவு படத்தில் நடித்த நடிகை மஞ்சு வாரியார் பைக் ஓட்டுவதற்கான லைசன்ஸ் பெற்றுள்ளார். 
 
அஜீத்துடன் லடாக்கில் பைக் பயணம் செய்த மஞ்சுவாரியர் அவருடன் பைக் பயணம் செய்த போது தானும் பைக் ஓட்ட வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது
 
இதனை அடுத்து அவர் கேரளா திரும்பியவுடன் எர்ணாகுளம் ஆர்டிஓ அலுவலகத்தில் டூவீலர் ஓட்டுவதற்கான லைசன்ஸ் பெற்றுள்ளார். இது குறித்த புகைப்படம் அவரது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது. இனி அஜித்தை போலவே மஞ்சு வாரியரையும் டூவீலரில் அடிக்கடி பார்க்கலாம் என ரசிகர்கள் கருத்து வருகின்றனர்
 
இந்த நிலையில் ‘துணிவு’ வெற்றியை அடுத்து மேலும் சில தமிழ் படங்களில் நடிக்க மஞ்சுவாரியர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran