புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 7 மே 2020 (19:20 IST)

ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் மினி ஸ்டூடியோ மற்றும் சிக்ஸர் என்டர்டைன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ஒன்று குறித்த விளம்பரங்கள் வெளிவந்து கொண்டிருந்தன
 
பிளான் பி என்று விளம்பரப்படுத்தப்பட்ட இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாகவும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் டைட்டில் ’திட்டம் இரண்டு’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கும் இந்த படத்திற்கு சதீஷ் ரகுநாதன் இசையமைக்க உள்ளார். கோகுல் பினாய் ஒளிப்பதிவில், பிரேம்குமார் படத்தொகுப்பில் இந்த படம் உருவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
சஸ்பென்ஸ் மற்றும் திகில் கதையம்சம் கொண்ட இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரே ரசிகர்களை கவரும் வகையில் இருப்பதால் இந்த படம் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு மேலும் ஒரு வெற்றி படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது