1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : செவ்வாய், 21 ஆகஸ்ட் 2018 (17:42 IST)

இந்த வார இறுதியில் 4 படங்கள் ரிலீஸ்!

தமிழ் சினிமாவில் புதிய படங்கள் எடுப்பது சில ஆண்டுகளாக மிக அதிகமாக உள்ளது. அதனால் வாரம், வாரம் பல படங்கள் ரிலீஸ் ஆகின்றன.
அந்த வகையில், இந்த மாத இறுதியில் பல படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன. அதன்படி வரும் ஆகஸ்டு 24ம் தேதி (வெள்ளிக்கிழமை) ல‌ஷ்மி, மேற்குத் தொடர்ச்சி மலை, களரி, எச்சரிக்கை ஆகிய 4 தமிழ்படங்கள் வெளியாகவுள்ளன. இவற்றில் லக்‌ஷ்மி, மேற்குத் தொடர்ச்சி மலை ஆகிய இரு படங்களுக்கும் அதிக  எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
 
'லஷ்மி'  நடனக்கலைஞர்களின் திறமையை, வெளிக்காட்டும்  படம். இதில் பிரபுதேவா, ஐஸ்வர்யா ராஜேஷ், கருணாகரன், தித்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏ.எ.ல். விஜய் இயக்கியுள்ளார். சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.
 
'மேற்கு தொடர்ச்சி மலை' நிலமற்ற ஏழைகளின் வாழ்க்கை சொல்லும் படம். இந்த படத்துக்கு அற்புதமாக இளையராஜா இசையமைத்துள்ளார். விஜய் சேதுபதி தயாரிப்பில் லெனின் பாரதி இயக்கியுள்ளார். ஆண்டனி பங்கு, காயத்ரி, ஆறு பாலா, தாமரை போன்றோர் நடித்துள்ளார்கள். சர்வதேச திரைப்பட விழாக்களில் பல விருதுகளை 'மேற்கு தொடர்ச்சி மலை' பெற்றுள்ளது.
 
வரும் ஆகஸ்டு 31ம் தேதி நயன்தாராவின் இமைக்கா நொடிகள், பிரகாஷ்ராஜ் நடிக்கும் 60 வயது மாநிறம், உள்ளிட்ட பல்வேறு படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது.