வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 22 ஜூலை 2019 (21:57 IST)

அதிர்ச்சி ஆனால் உண்மை: சாக்சியை நாமினேட் செய்தார் கவின்:

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரம் திங்கட்கிழமை அன்று அந்த வார இறுதியில் ஒரு நபரை வெளியேற்ற நாமினேஷன் செய்யப்படும் நிலையில் இன்று அந்த நாமினேஷன் படலம் நடந்தது. இதில் யார் யாரை நாமினேட் செய்தார்கள் என்று கீழே பார்ப்போம்
 
சாக்சி: மீரா, சரவணன்
சாண்டி: அபிராமி, சாக்சி
கவின்: சாக்சி, அபிராமி
தர்ஷன்: கவின், சாக்சி
ஷெரின்: மீரா, சரவணன்
அபிராமி: கவின், மீரா
சரவணன்: அபிராமி, சேரன்
சேரன்: கவின், சாக்சி
மதுமிதா: கவின், சாக்சி
முகின்: மதுமிதா, சரவணன்
மீரா: சாக்சி, அபிராமி
லாஸ்லியா: சாக்சி, மீரா
ரேஷ்மா: கவின், சேரன்
 
இதில் சாக்சியை காதல் செய்யும் கவின், அவரையே நாமினேட் செய்தது அனைவருக்கும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் அளித்தது. கடந்த வாரம் நடைபெற்ற பிரச்சனையால் கவின் மட்டுமின்றி சாண்டி, தர்ஷன், சேரன், மதுமிதா, மீரா, லாஸ்லியா ஆகியோர்களும் நாமினேட் செய்தனர். மொத்தத்தில் இந்த வாரம் சேரன், மீரா, சரவணன், அபிராமி, கவின், சாக்சி ஆகியோர்கள் நாமினேஷனில் சிக்கியுள்ளனர். இதில் சேரன், மீரா, சரவணன், அபிராமி ஆகிய நால்வர் கடந்த வாரமும் நாமினேட் ஆனவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது