வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : வெள்ளி, 1 மார்ச் 2019 (21:43 IST)

‘நட்பே துணை’ படத்தில் இதுதான் ஹைலைட்டே... ஹிப் ஆப் ஆதி கலகல...

ஹாக்கி விளையாட்டை மையமாக வைத்து  சுந்தர் சி   தயாரித்துள்ள படம் நட்பே துணை. ஹிப் ஆப் ஆதி ஹீரோவாக நடித்துள்ளார்.  அனகா ஹீரோயினாக நடித்துள்ளார். எருமசாணி விஜய் காமெடி ரோலில் நடித்துள்ளார். இவர்களுடன் கரு பழனியப்பன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.


 
இப்படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று நடந்தது. விழாவில் இசையமைப்பாரும் நடிகருமான  ஆதி பேசுகையில்,
 
‘நட்பே துணை’யில் இப்படியொரு வாய்ப்பை கொடுத்த சுந்தர்.சி அண்ணாவுக்கு நன்றி.
 
இப்படத்தின் கதையைக் கூறும்போதே பெரிய தொகை செலவாகும் என்று தெரிந்தது. சுந்தர்.சி அண்ணாவிடம் கூறியதும் தயாரிக்க சம்மதித்தார். மீசைய முறுக்கு படத்தில் இருக்கும் மொத்த குழுவும் இணைந்து பணியாற்றியிருக்கிறோம். தேவேஷ் மற்றும் ஸ்ரீகாந்த் இருவரும் அவர்களின் வேலையை ஒத்திவைத்து எனக்காக இப்படத்தை முடித்துக் கொடுத்தார்கள்.
பள்ளியில் கூடைப்பந்து விளையாடியிருக்கிறேன். இப்படத்திற்காக ஹாக்கி விளையாடியிருக்கிறேன். இதில் இரண்டு குழுவில் 22 பேரில் 10 பேர் நிஜ ஹாக்கி வீரர்கள். அவர்களுக்கு இணையாக விளையாட வேண்டும் என்பதற்காக தீவிரமாக பயிற்சி எடுத்தோம். அதற்காக ஹாக்கி பயிற்சியாளர் குணசீலன் பயிற்சியளித்தார். ஒருநாள் ‘ஹாக்கி ஸ்டிக்’ என்று கூறுவதற்கு பதில் ‘பேட்’ என்று கூறிவிட்டேன். அதற்காக இரண்டு சுற்று ஓட விட்டார். எங்களுடன் அனகாவும் காலில் அடிபட்டும் தீவிரமாக  பயிற்சி மேற்கொண்டார்இப்படத்தின் கடைசி 35 நிமிடங்கள் எங்களுடைய அர்ப்பணிப்பு அனைவருக்கும் தெரியும். மது, புகை இல்லாமல் இப்படம் உருவாகி உள்ளது.