புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 14 டிசம்பர் 2018 (15:10 IST)

வெளியானது! ஹிப்ஹாப் ஆதியின் கேரளா பாடல் !

ஹிப்-ஹாப் தமிழா ஆதி நடிப்பில் நட்பே துணை படத்தின் முதல் பாடல் வெளியானது.



 
பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், நடிகர், இயக்குனர் என பல துறைகளில் கவனம் செலுத்தி அதில் வெற்றி பெற்றும் வருபவர் ஹிப்-ஹாப் தமிழா ஆதி. 
 
இளைஞர்கள் மத்தியில் பெரும் ரசிகர்களை பெற்ற ஆதியின் ஒவ்வொரு படைப்பும் சமூக கருத்துக்களை கொண்டதாக விளங்கப்படுகிறது. கடந்த ஆண்டு சுந்தர்.சி தயாரிப்பில் மீசைய முறுக்கு எனும் படத்தில் ஹீரோவாகவும் நடித்து அசத்தியிருப்பார்.
 
இதனையடுத்து தற்போது ஆதி ஹீரோவாக நடித்து வரும் ‘நட்பே துணை’ படத்தையும் சுந்தர் .சி. தயாரித்து வருகிறார். ஆதிக்க ஜோடியாக புதுமுகம் அனகா நடிக்கிறார். 
 
இந்தப் படத்தை புதுமுக இயக்குனர் டி.பார்த்திபன் தேசிங்கு இயக்கி வருகிறார். இவர் ‘மான் கராத்தே’, ‘ரெமோ’ படங்களில் இணை இயக்குனராக பணியாற்றியவர்.  நட்பே துணை  ஹாக்கி விளையாட்டை மைய்யமாக கொண்ட படம் என்பதால் பிரதான மைதானம் மற்றும் காரைக்கால், தரங்கம்பாடி, பாண்டிச்சேரி பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் தற்போது இப்படத்தின் முதல் பாடலான கேரளா சாங் இன்று வெளியாகி அனைவரையும் ஈர்த்து வருகிறது. இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் ஆதியின் ரசிகர்கள்.