செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 3 அக்டோபர் 2020 (16:25 IST)

இதுதான் எங்க டீமுக்கு கிடைச்ச பெரிய மகிழ்ச்சி…விஜய் சேதுபதி பட தயாரிப்பாளர் நெகிழ்ச்சி

தமிழ் சினிமாவில் நடித்து வரும் முன்னணி நடிகர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் க/பெ ரணசிங்கம்.  இப்படத்தை விருமாண்டி என்பவர் இயக்கியுள்ளார்.

இப்படம் வேறெந்தப் படமும்  இல்லாத விதத்தில் இந்தி, தெலுங்கு கன்னடம், தமிழ், மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகிறது.

விஜய் சேதுபதியின் படம் இதற்கு இவ்வாறு ரிலீசானதில்லை என்பதால் அவரது ரசிகர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இப்படத்தில்  கவிப்பேரரசு வைரமுத்து ஜிப்ரான் இசையில் எழுதிய பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

இந்நிலையில் இப்படம் குறித்து இப்படத்தின் இயக்குநர் சீனுராமசாமி தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இப்படம் குறித்து ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் நேர்மறையான விமர்சனம் கொடுத்து பாராட்டி வருவதால் இப்படக்குழுவினர் மகிழ்ந்துள்ளனர்.

இந்தப் பாராட்டுகள்  எங்க டீமுக்கு கிடைச்ச பெரிய மகிழ்ச்சி என்று கேஜேஆர் ஸ்டுடியோஸ் தெரிவித்துள்ளது. இந்த பாராட்டுகள் தான் எங்க டீமுக்கு கிடைச்ச பெரிய மகிழ்ச்சி!

மிக்க நன்றி!