ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Sasi)
Last Modified: வியாழன், 23 நவம்பர் 2017 (10:11 IST)

“அரசியலில் இறங்க அவசரம் இல்லை” - ரஜினிகாந்த் பேட்டி

‘அரசியலில் இறங்க அவசரம் இல்லை’ என ரஜினிகாந்த் பேட்டி அளித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள மந்த்ராயலம் ராகவேந்திரர் கோவிலுக்கு நேற்று முன்தினம் சென்று வழிபட்டார் ரஜினி. இரண்டு நாட்கள் அங்கு தங்கியிருந்தவர், விமானம் மூலம் நேற்று சென்னை வந்தார்.
 
அப்போது அங்கு கூடியிருந்த பத்திரிகையாளர்களிடம் பேசிய ரஜினி, “அரசியல் களத்தில் உடனடியாக இறங்குவதற்கு அவசரம் இல்லை. ‘காலா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது. என்னுடைய பிறந்தநாளில் ரசிகர்களைச் சந்திப்பேன்” என்று  கூறினார்.