திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 23 செப்டம்பர் 2023 (07:32 IST)

‘பேரு மட்டும்தான் ஒன்னு… மத்தபடி எந்த சம்மந்தமும் இல்ல’ – சந்திரமுகி 2 பற்றி ரகசியம் பகிர்ந்த ராகவா லாரன்!

2005 ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாக்கத்தில் உள்ளது.லாரன்ஸ், வடிவேலு, ராதிகா சரத்குமார் மற்றும் கங்கனா ரனாவத் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். படத்தில் சந்திரமுகியாக நடிக்க பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கிராபிக்ஸ் காட்சிகளின் பணிகள் முடிவடையாததால் படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 28 ஆம் தேதி என்று மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ராகவா லாரன்ஸ் “சந்திரமுகி 1 படத்துக்கும் சந்திரமுகி 2 படத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.  பெயர் மட்டும்தான் ஒன்றாக இருக்கும். ஒரிஜினலாக சந்திரமுகி வந்தால் எப்படி இருக்கும் என்பதுதான் கதை. வேட்டையன் கதாபாத்திரத்தில் ஒரு பெரிய சஸ்பென்ஸ் வைத்திருக்கிறோம்.” எனக் கூறியுள்ளார்.