மெர்சல் படத்தில் எந்த காட்சியும் நீக்கவில்லை: தயாரிப்பு தரப்பு அதிரடி!!
மெர்சல் படத்தில் உள்ள எந்த காட்சிகளும் வசனங்களும் நீக்கப்படாது என தேனாண்டாள் தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஹேமா ருக்மணி அறிவித்துள்ளார்.
இளையதளபதி விஜய் நடித்த மெர்சல் படத்தின் சர்ச்சைக்குரிய ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு காட்சிகளை நீக்க பாஜக கட்சி தலைவர்கள், மருத்துவ சங்கங்கள் வலியுருத்தின.
மேலும், தயாரிப்பு தரப்பினர் காட்சிகளை நீக்க ஒப்பு கொண்டிருப்பதாகவும் சென்சார் அனுமதி பெற்று வரும் திங்கள் முதல் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படும் என்றும் கூறப்பட்டது.
ஆனால் தற்போது மெர்சல் படத்தில் எந்த காட்சிகளும் வசனங்களும் நீக்கப்படவில்லை என தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது.