1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By bala
Last Modified: செவ்வாய், 4 ஏப்ரல் 2017 (11:48 IST)

மணிரத்னம் படத்தை வெளியிடும் தேனாண்டாள் பிலிம்ஸ்

மணிரத்னம் படம் என்றால் இளசுகள் முதல் நடுத்தர வயது வரை உள்ளவர்களுக்கு கொண்டாட்டம்தான். காரணம் அவரது படங்களில் அமையும் காதல் காட்சிகளே. அந்த வகையில் மணிரத்னம் இயக்கி அடுத்து வெளியாக உள்ள படம் காதல் வெளியிடை. கார்த்தி- அதிதி ராவ் நடித்துள்ள இந்த படத்தை மணிரத்னம் சொந்தமாக தயாரித்து இயக்கியுள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல்கள் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. வருகிற 7ம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது.


 

விஜய் நடிப்பில் அட்லி இயக்கும் படத்தை தயாரித்து வரும் இந்த நிறுவனம் பாகுபலி2 உள்ளிட்ட பல படங்களின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.