14 மாதங்களுக்கு பிறகு அமெரிக்காவில் திரையரங்குகள் திறப்பு… ஆர்ப்பரித்த ரசிகர்கள்!
கொரோனா காரணமாக 14 மாதங்களாக மூடப்பட்டு இருந்த திரையரங்குகள் அமெரிக்காவில் திறக்கப்பட உள்ளன.
கொரோனா பரவலின் முதல் அலையில் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா இருந்தது. அந்த நாட்டில் இதுவரை நடந்த போர்களை விர கொரோனாவால் அதிகமானவர்கள் பலியாகினர். இந்நிலையில் தடுப்பூசி கண்டுபிடிப்புக்குப் பிறகு இப்போது ஓரளவு கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் 14 மாதங்களுக்குப் பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்டன. கலிபோர்னியாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மூத்த நடிகரான அர்னால்ட் உள்ளிட்டவர்கள் கலந்துகொள்ள விரைவில் ரிலீஸாகவுள்ள படங்களின் டிரைலர்கள் அதில் ரிலீஸாகின. உலக சினிமா வர்த்தகத்தில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவின் ஹாலிவுட் இந்த 14 மாதங்களில் மிகப்பெரிய அளவில் சரிவை சந்தித்துள்ளது.