வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: புதன், 5 ஏப்ரல் 2017 (15:51 IST)

சிவலிங்கா படத்தின் நிஜ ஹீரோ ரித்திக்க சிங்: கூறும் ராகவா லாரன்ஸ்!

சிவலிங்கா கன்னடத்தில் வெளியாகி ஹிட்டான படத்தின் தமிழ் ரீமேக். இதன் இயக்குனர் பி.வாசு எடுத்திருந்தார். தற்போது  தமிழில் வரும் ஏப்ரல் 14ல் வெளியாகவுள்ளது.

 
 
சிவலிங்கா படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. அப்போது பேசிய ராகவா லாரன்ஸ், இந்த படத்தில் நான் உள்பட அனைத்து நடிகர்களும் மிக எளிதாக நடித்தோம். ஆனால் ரித்திகாசிங் கேரக்டர் ரொம்ப வலுவானது என்பதால் அவர்  கஷ்டப்பட்டு நடித்த பின்னர்தான் ஷாட் ஓகே ஆனது. அவரை இயக்குனர் பி.வாசு அதிகமாக வேலை வாங்கினார்.
 
எனவே இந்த படத்திற்கு நான் ஹீரோ என்று சொல்வதைவிட ரித்திகாசிங்தான் உண்மையான ஹீரோ என்று சொல்ல  வேண்டும் அதுபோல் படத்தில் ரெண்டாவது ஹீரோ வடிவேலு. சந்திரமுகியில் வரும் ஜோதிகா போல சிவலிங்கா படத்தில்  வரும் ரித்திக்க சிங். வடிவேலுவுக்கும் இதுதான் ரீ எண்டிரி என கூறியுள்ளார்.