திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 5 பிப்ரவரி 2018 (22:19 IST)

விஜய் 62 வில் இணைந்திருக்கும் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர்கள்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், இளைய தளபதி விஜய் நடிப்பில் தயாராகிக் கொண்டிருக்கும் விஜய் 62 படத்திற்கு பிரபல ஸ்டண்ட் மாஸ்டர்கள் ஒப்பந்தமாகியுள்ளனர்.

 
துப்பாக்கி, கத்தி திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய்யும், ஏ.ஆர்.முருகதாஸும் மூன்றாவது முறையாக விஜய் 62 படத்தில் இணைந்துள்ளனர்.  பைரவா படத்தைத் தொடர்ந்து விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.  ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். கிரீஷ் கங்காதரன் விஜய் 62 படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.  தேசிய விருதுபெற்ற எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் பணிகளைக் கவனிக்க சந்தானம் ஆர்ட் டைரக்டராகப் பணியாற்றுகிறார்.
 
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈசிஆரில் உள்ள பனையூரில் இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது.  இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு, கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தெலுங்கில் 100 படங்களுக்கு மேல் ஸ்டண்ட் காட்சிகளை வடிவமைத்த முன்னணி ஸ்டண்ட் மாஸ்டர்களான ராம் - லக்‌ஷ்மன், விஜய் 62 படத்திற்கு ஸ்டண்ட் காட்சிகளை வடிவமைக்க  ஒப்பந்தமாகியுள்ளனர்.  இது இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.