1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj kiyan
Last Updated : சனி, 30 நவம்பர் 2019 (19:18 IST)

ஹேர் ஸ்டைல் மாற்றிய பிரபல நடிகர்... ரூ. 7 கோடி கேட்டு நச்சரிக்கும் தயாரிப்பாளர் !

பிரபல மலையாள நடிகர் ஷேன் நிகம் என்பவர்,  இஷக், கும்பளங்கி ஆகிய மலையாள படங்களில் நடித்து புகழ்பெற்றவர்.அவர் புதுப்படத்திற்காக நீளமாக முடியை வளர்த்து வந்த நிலையில் அதை ஒண்ட நறுக்கிவிட்டார். இந்நிலையில் அப்படத்தின் தயாரிப்பாளர் அவரிடம் ரூ. 7 கோடி கேட்டு தயாரிப்பாளர் சங்கத்தை அணுகி உள்ளார்.  
பிரபல மலையாள நடிகர் ஷேன் நிகம் என்பவர், ஒரு புதுப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், அப்படத்தின் இயக்குநர், நிகேமை நீளமாக முடி வளர்க்கச் சொல்லி அறிவுறுத்தினார். அதற்கு கடும் கட்டுப்பாடுகளும் விதித்ததாகத் தெரிகிறது. 
 
இந்நிலையில், நடிகர் நிகேம் தான் நீளமாக வளர்த்த  முடியை திடீரென வெட்டியுள்ள நிலையில், வெயில் என்ற படத்தின் படப்பிடிப்பிலும் கலந்துகொண்டுள்ளதாகத் தெரிகிறது.
 
இந்நிலையில், நிகேம் மீது, இயக்குநர் சரத் மற்றும் படத்தின் தயாரிப்பாளர் ஜோபி ஜார்ஜ் இருவரும்  மலையாள நடிகர் சங்கத்தில் புக்கார் அளித்துள்ளனர். மேலும், அவரால் கைவிடப்பட்டுள்ள  படங்களை  இயக்க செலவழித்த ரூ. 7 கோடியை நிகம் தர வேண்டுமென கூறியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.