புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 21 ஜூலை 2017 (12:55 IST)

அந்த வேலை எல்லாம் இங்க நடக்காது; பாடம் கற்பிக்கும் ஓவியா!

பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடையே விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. பலரும் நடிகை ஓவியாவுக்கு ஆதரவாகி  வாக்களித்து வரும் நிலையில், அவருடன் நமீதா மற்றும் காயத்ரி ஆகியோர் அவருடன் சண்டை போட துவங்கிவிட்டனர்.

 
ப்ரொமோ வீடியோவில் பிக் பாஸ் வீட்டில் காயத்ரி ரகுராம் ஓவியாவுடன் சண்டை போடுவது போன்று வெளியிட்டுள்ளார்கள். வழக்கமாக காயத்ரி ஜூலியை தான் வம்பிழுப்பார். தற்போது ஓவியாவை டார்கெட் செய்துள்ளனர். ஆனால் காயத்ரி சண்டையை ஆரம்பித்து டென்ஷன் ஆக்கினாலும், கூலாக இடத்தை விட்டு சென்றுவிடுவார். இதே ஜூலியாக இருந்திருந்தால் உட்கார்ந்து அழுது தீர்ப்பார். ஓவியாவிடம் அந்த வேலை எல்லாம் நடக்காது என்பது காயத்ரிக்கும் தெரியும்.
 
இதனால் பார்வையாளர்களுக்கு காயத்ரி ரகுராமை கண்டாலே பிடிப்பது இல்லை. அவரை முதலில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றுங்கள் என்று கூறி வருகின்றனர், காயத்ரியை கலாய்த்து ஏகப்பட்ட மீம்ஸ் போட்டும் வருகிறார்கள் நெட்டிசன்கள்.
 
இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவுக்கு நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்து வருகிறது. ஓவியாவை எதிர்க்கும் நமீதா மற்றும் காயத்ரிக்கும் இன்றைய நிகழ்ச்சியில் நோஸ் கட் உண்டு என்பது மட்டும் நிச்சயம்.