மெகா ஹிட் ஆன மெகா ஸ்டார் படம்!!
தெலுங்கு சினிமா உலகில் மெகா ஸ்டார் என கொண்டாடப்படுபவர் சிரஞ்சீவி. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் படங்களில் நடிக்க துவங்கியுள்ளார்.
பிரஜா ராஜ்யம் என புதிய கட்சி தொடங்கி, அந்த கட்சியை காங்கிரஸ் உடன் இணைத்து மத்திய அமைச்சராக பதவி வகித்தார். தற்போது மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், சிரஞ்சீவி மீண்டும் அரசியலை விட்டுவிட்டு, சினிமாவுக்குத் திரும்பியுள்ளார்.
தமிழில் விஜய் நடித்த கத்தி படத்தையே, தெலுங்கில் ரீமேக் செய்து, கைதி நம்பர் 150 என்ற பெயரில் சிரஞ்சீவி வெளியிட்டுள்ளார்.
கடந்த வாரம் வெளியான இந்த படம், இதுவரை ரூ.120 கோடி வசூலித்து, புதிய சாதனை படைத்துள்ளது. இன்னும் சில நாட்களில், ரூ.150 கோடி என்ற சாதனையை தொடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.