திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 4 ஆகஸ்ட் 2020 (10:06 IST)

பிக்பாஸ்-4ல் பங்கேற்கும் போட்டியாளர்களின் முழு விவரம் இதோ!

முதன் முதலாக இந்தியில் ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி பின்னர் தமிழ், தெலுங்கு , மராத்தி, கன்னடா என பல மொழிகளில் ஒளிபரப்பப்பட்டு இந்தியா முழுக்க பரவி வருகிறது. அந்தவகையில் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை ஜூனியர் NTR , நாணி , நாகார்ஜூனா என்ற முதல் மூன்று சீசனை வெவ்வேறு பிரபலங்கள் தொகுத்து வழங்கினர்.

தமிழை போலவே தெலுங்கிலும் 4 பிக்பாஸ் சீசனுகாகன் வேலைகள் விறு விறுப்பாக நடந்து வருகிறது. கொரோனா ஊரடங்கையும் பொருட்படுத்தாமல் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் பிக் பாஸ் 4 தெலுங்கு நிகழ்ச்சியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அவ்வப்போது வெளியாகி வருகிறது. முதலில் கண் இமைக்குள் கை ரேகை பதிந்தது போல்  அட்டகாசமான லோகோ ப்ரோமோ ஒன்று வெளியாகியது.

அதையடுத்து நடிகர்  நாகர்ஜுனா தனது ட்விட்டர் பக்கத்தில் கோட் சூட் உடையில் ஷூட்டிங்கில் இருக்கும் தனது புகைப்படத்தை பகிர்ந்து "மீண்டும் படப்பிடிப்புக்கு வந்து விட்டதாக பதிவிட்டிருந்தார். இந்நிலையில் தற்ப்போது தெலுங்கு பிக்பாஸ் 4 சீசனில்  நடிகைகள் ஹம்சானந்தினி, ஸ்ரத்தா தாஸ், யாமினி பாஸ்கர், பிரியா வட்லாமணி ஆகியோரும், டிவி பிரபலங்களான மஞ்சுஷா மற்றும் விஷ்ணு பிரியா ஆகியோரும் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த நிகழ்ச்சி கொரோனா தொற்றின் பாதுகாப்புகளை கடைப்பிடித்தே நடக்கும் என்பதில் முழு பொறுப்பினை ஏற்றுள்ளனர். அதன்படி நிகழ்ச்சி வரும் ஆகஸ்ட் 30 முதல் ஆரம்பமாகவுள்ளதால் போட்டியாளர்களை முன்னரே கொரோன தொற்று பரிசோதித்து அதன் பிறகு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க உத்தரவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.