1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 19 ஜனவரி 2022 (18:57 IST)

சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல் ஒத்திவைப்பு!

கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பள்ளி கல்லூரி தேர்வுகள் உள்பட பல தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு வருகின்றன 
 
அதேபோல் திரை உலக சம்பந்தப்பட்ட தேர்தல்களும் ஒத்தி வைக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது 
 
சமீபத்தில் இயக்குனர் சங்க தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது சின்னத்திரை நடிகர் சங்க தேர்தலை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
ஜனவரி 20ஆம் தேதி நடைபெற இருந்த சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் சின்னத்திரை நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்