1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 9 அக்டோபர் 2020 (15:29 IST)

சூப்பர்ஹிட் பட இயக்குனரின் அடுத்த படத்தில் தன்யா ரவிச்சந்திரன்!

விஜய் சேதுபதி நடித்த ’கருப்பன்’ படத்தின் நாயகி தன்யா ரவிச்சந்திரன் பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி என்பது தெரிந்ததே. ’கருப்பன்’ படத்திற்கு பின்னர் அவருக்கு குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் எந்த படமும் கமிட்டாகவில்லை. இதனையடுத்து கடந்த சில வாரங்களாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்ததன் பயனாக சமீபத்தில் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமானார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
 
அதில் ஒரு படம் தான் சூப்பர் ஹிட் படமான ‘சுந்தரபாண்டியன்’ படத்தை இயக்கிய எஸ்.ஆர் பிரபாகரன் இயக்கும் அடுத்த படம். இந்த படத்தை இயக்குவதோடு அவரே தயாரிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இதுவொரு நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள க்ரைம் த்ரில்லர் படம் என்றும் தன்யாவுக்கு இந்த படத்தில் ஆக்சன் காட்சிகளும் உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் பூஜை இன்று சென்னையில் நடந்ததை அடுத்து நாளை முதல் படப்பிடிப்பும் தொடங்கவுள்ளது.
 
மேலும் அஜித்தின் வலிமை படத்தில் வில்லனாக நடிக்கும் கார்த்திக்கேயா ஜோடியாக தெலுங்கு படம் ஒன்றிலும் நடிக்க தன்யா ரவிச்சந்திரன் ஒப்பந்தம் ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது