செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 31 ஜனவரி 2019 (13:38 IST)

விமர்சகருக்கு விளம்பரம் தேடித் தந்த படக்குழு- சர்ச்சையால் வந்த வினை !

சார்லி சாப்ளின் 2 படத்திற்கு மோசமான முறையில் விமர்சனம் செய்ததாக தமிழ் டாக்கீஸ் நீல சட்டை மாறன் மீது சார்லி சாப்ளின் 2 படக்குழு புகார் அளித்ததை அடுத்து அவரது வீடியோவுக்கு பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.


 

சமீபத்தில் பிரபுதேவா, நிக்கி கல்யாணி ஆகியோர் நடிப்பில் சார்லி சாப்ளின் திரைப்படம் திரைக்கு வந்தது. இந்த படத்தை வழக்கம் போல தனது நகைச்சுவையான பாணியில் யுட்யூப் விமர்சகர் ப்ளு சட்ட மாறன் என அழைக்கப்படும் தமிழ் டாக்கீஸ் மாறன் விமர்சனம் செய்தார்.

இதனால் கடுப்பான தயாரிப்பாளர் டி சிவா மற்றும் இயக்குனர் சக்தி சிதம்பரம் ஆகியோர் ப்ளு சட்ட மாறனுக்கு எதிராக காவல்துறையில் புகார் அளித்தனர். புகாரில்  சார்லி சாப்ளின் 2 படத்தை நேர்மறையாக விமர்சனம் செய்ய தன்னிடம்  மாறன் பணம் கேட்டு மிரட்டியதாகவும் நாங்கள் கொடுக்க மறுத்ததால் எங்கள் படத்தை தரக்குறைவாக விமர்சனம் செய்துள்ளார் என்று இயக்குநர் சக்தி சிதம்பரம் தெரிவித்தார். மேலும் அவருக்கு தயாரிப்பாளர்கள் யாரும் விளம்பரம் தரக்கூடாது என்றும் அவருக்கு விளம்பரம் கொடுக்கும் விஐபி ஷாம்பூ போன்றவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் கூறினார்.

இது சம்மந்தமாக பதிலளித்த மாறன் ‘தரக்குறைவான படங்களையே எடுத்து வருகிறார்கள். அதனால் தான் தரக்குறைவாக விமர்சிக்கிறேன். என்னை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. தொடர்ந்து அனைத்துப் படங்களையும் விமர்சனம் செய்வேன்’ எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் இந்த சர்ச்சையால் ப்ளு சட்ட மாறனின் குறிப்பிட்ட சார்லி சாப்ளின் பட விமர்சனத்திற்கு பார்வையாளர்களின் எண்ணிக்கைக் கூடியுள்ளது. இதுவரை அந்த வீடியோவை  இதுவரை 15 லட்சம் பேர் பார்த்துள்ளனர். ரஜினி, அஜித், விஜய் படங்களின் விமர்சன்ங்களுக்கு மட்டும்தான் இந்த் அளவில் பார்வையாளர்கள் கிடைப்பார்கள். ஆனால் இந்த சர்ச்சையால் இப்போது சார்லி சாப்ளின் 2 படத்திற்குப் பெரிய அளவில் பார்வையாளர்கள் கிடைத்துள்ளனர். வழக்கமாக விமர்சனங்கள்தான் படங்களுக்குப் பெரிய அளவில் விளம்பரமாக இருந்து வந்துள்ளன. ஆனால் முதல் முதலாக ஒரு படம், அந்த படத்தின் விமர்சனத்திற்கு விளம்பரமாக அமைந்துள்ளது.

இந்த விமர்சனத்தைப் பார்த்த 15 லட்சம் பேரில் பாதிபேராவது சார்லி சாப்ளின் படத்தைப் பார்த்திருப்பார்களா என்பது சந்தேகமே !