லவ் டுடே பாணியில் டி ராஜேந்தர் இயக்கும் புதிய படம்.. சிம்பு நடிப்பாரா?
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் மற்றும் பாடல் ஆசிரியர் என பலதுறைகளில் செயல்பட்டவர் டி ராஜேந்தர். அவரின் படங்கள் 80 களில் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை செலுத்தின. அதன் பின்னர் அவர் அறிமுகப்படுத்திய அவரின் மகன் சிம்பு இப்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார்.
சமீபத்தில் அவர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு லண்டனுக்கு சென்று சிகிச்சை பெற்று திரும்பினார். கடைசியாக கவண் படத்தில் நடித்திருந்த அவர் அதன் பின்னர் எந்த படத்திலும் நடிக்கவில்லை.
இந்நிலையில் இப்போது அவர் தற்காலத்தைய காதலை மையமாகக் கொண்டு கலக்கல் காதல் என்ற படத்தை இயக்கப் போவதாக அறிவித்துள்ளார். மேலும் திரையரங்குகளில் சின்ன பட்ஜெட் படங்கள் ஓடவேண்டும் என்றால் திரையரங்குகளில் டிக்கட் கட்டணத்தை குறைக்க வேண்டுமென அவர் கூறியுள்ளார்.